திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், அம்பிளிக்கை போலீஸ் சரகம் தங்கச்சியம்மாபட்டியில் ஐயங்கார் பேக்கரி செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கச்சியம்மாபட்டி பாறைத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் மகன் பாலாஜி (24). என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (30.09.2026) மாலை 6 மணியளவில் மேற்படி பேக்கரிக்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 1) நவீன்குமார் (19). த/பெ. ரகுபாலன், செங்காட்டுத்தெரு, தங்கச்சியம்மாபட்டி,
2) நாகராஜ் (19). த/பெ. தங்கராஜ், செங்காட்டுத்தெரு, தங்கச்சியம்மாபட்டி மற்றும் 3) ராஜ்குமார் (18). த/பெ. தங்கராஜ், செங்காட்டுத்தெரு, தங்கச்சியம்மாபட்டி ஆகியோர் முன்பகை காரணமாக கையில் பட்டா கத்தியுடன் வந்து பேக்கரிக்குள் சென்று அங்கிருந்த பாலாஜியை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் ஏற்பட்ட பாலாஜி தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக காயம்பட்ட பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் மேற்படி குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் அம்பிளிக்கை காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட SP. ஜெயக்குமார், இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், ஒட்டன்சத்திரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். கார்த்திகேயன் மேற்பார்வையில், ரெட்டியார்சத்திரம் காவல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் சார்பு ஆய்வாளர் சவடமுத்து தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதன்படி மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான 1) நவீன்குமார் (19). 2) நாகராஜ் (19). 3) ராஜ்குமார் (18). ஆகிய 3 பேரையும் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். மேலும் அவர்கள் குற்றச் சம்பவத்திற்குப் பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















