திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது R.S.ரோடு மற்றும் LGB.காம்பவுண்ட் பகுதிகளில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த அமலநேசன்(45). வேடசந்தூர், ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த ராமர்(52). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 46 மதுபான பாடல்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















