திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனப் பகுதிக்கு உட்பட்ட தனியார் எஸ்டேட்டில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுமலை வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் சிறுமலை பகுதிகளில் விசாரணை நடத்தியதில் சிறுமலை பிடிபி எஸ்டேட்டில் பணிபுரியும் 38 வயதான T J தாமஸ் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாடியதாக ஒப்புக்கொண்டார். மேலும் ஆய்வு மேற்கொண்டதில் நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் மற்றும் வன விலங்குகளின் உடல் பாகங்கள் மேலும் வனவிலங்குகளை வெட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டது. மேலும் வேறு யாரும் சம்பந்தப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















