கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்த போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருப்பத்தூர் – ஊத்தங்கரை ரோடு, வடிவேலன் பெட்ரோல் பங்க் அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ₹10,000/- ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் இருந்தது. வெளி மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்கள் கடத்தி வந்த ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களுடன் வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து ஐந்து குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















