திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிறுநாயக்கன்பட்டி கல்லறை தோட்டம் அருகே கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று (09.08.2026) தீவிர சோதனை நடத்தினர். அப்போது போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்ற 5 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 20.5 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட 5 பேரும் மீது வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தொடர்புடைய மற்ற நபர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு நடவடிக்கை: கடந்த (08.07.2026) முதல் (09.08.2026) வரை திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனைக்கு எதிராக நடத்தப்பட்ட சோதனைகளில் 69 வழக்குகள் பதிவு, 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 42 கிலோ கஞ்சா, 2 கார்கள் மற்றும் 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார், இ.கா.ப. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















