கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ராமநாயக்கன் ஏரி அருகே போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் சுமார் 3 கிலோ கஞ்சா இருந்தது.சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















