திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் காவல் நிலைய ஆய்வாளர் சாகுல்ஹமீது தலைமையில் சார்பு ஆய்வாளர் சேகர் மற்றும் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பள்ளப்பட்டி, சுடுகாடு அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த பள்ளப்பட்டி மேற்கு தெருவை சேர்ந்த சரவணன்(40). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 35 மதுபானம் பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















