கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட காவல் அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீண்டகாலமாக புலனாகாமல் (Untraced) உள்ள வழக்குகளை விரைந்து கண்டறிந்து முடிக்க தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளவும், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு அமலாக்க நடவடிக்கைகளை மாவட்டம் முழுவதும் மேலும் தீவிரப்படுத்தவும், கஞ்சா, குட்கா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கும் வகையில் தொடர் சோதனைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார். இந்த குற்றக் கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.




















