கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜுஜுவாடி சோதனை சாவடி அருகே மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் இருந்த போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் இருந்தது. மதுபானங்கள் விற்பனைக்கு வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனத்துடன் மதுபானங்கள் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















