மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் உட்கோட்டம் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சதீஸ் என்பவரது மனைவி ரெனோ என்பவரது வீட்டில் கடந்த (28.05.2026) அன்று திருட்டு சம்பவம் நடைபெற்றது. வீட்டில் இருந்த 117 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம், கடிகாரம் (வாட்ச்) மற்றும் மடிக்கணினி (லேப்டாப்) ஆகியவை திருடு போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்யடிட்டு (குற்ற எண்: 245/2026 u/s 331(3), 305(a), 238, 317(4), 61(2) BNS) விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில், அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
முதல் கைது நடவடிக்கை: இவ்வழக்கில் ஏற்கனவே சசிகலா (க/பெ திருப்பதி, டிவிஎஸ் நகர், நேரு நகர் 5வது தெரு, மதுரை) என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.86,500 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டாம் கைது நடவடிக்கை: தற்போது இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான சூர்யா @ பட்டறை சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 39½ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் இதுவரையில் மொத்தம் 50½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.86,500 ரொக்கப் பணம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்டு திருட்டுப்போன நகைகள் மற்றும் பணத்தை மீட்ட அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















