திண்டுக்கல்: திண்டுக்கல் செம்பட்டியை அடுத்த செல்லாயிபுரத்தை சேர்ந்த பாரதி(62). இவர் கடந்த 18-ம் தேதி செம்பட்டி புது பைபாஸ் சாலையில் புல்வெட்டி கன்மாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் கழுத்தில் அணிந்திருந்த 1.1/2 செயினை பறித்து சென்றார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சேக் அப்துல்லா மற்றும் காவலர்கள் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சிவகாசி, ஆலாவூரணியை சேர்ந்த ஈஸ்வரன்(39). என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















