கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் மற்றும் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பட்டுவாரப்பள்ளி சோதனைசாவடி மற்றும் சொக்கநாதபுரம், கல்லுப்பள்ளி பிரிவு சாலை ஆகிய இரு வெவ்வேறு இடங்களில் வருவாய் வட்டாட்சியர் அவர்கள் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி கடத்தப்பட்ட சுமார் 30 யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய ஐந்து எதிரிகளை கைது செய்து M-Sand கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து செய்து ஐந்து குற்றவாளிகளையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.



















