திண்டுக்கல்: திண்டுக்கல், சாணார்பட்டி அடுத்த அஞ்சுகுளிபட்டியை சேர்ந்த சஞ்சய் இவரது மனைவி சரண்யா(22). இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சரண்யா வீட்டில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமாகி 4 மாதங்கள் ஆன காரணத்தால் திண்டுக்கல் கோட்டாட்சியர் பழனிச்சாமி விசாரணை மேற்கொண்டார். மேலும் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















