திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட நடமாடும் தடயவியல் ஆய்வக (Mobile Forensic Science Laboratory vehicle) வாகனத்தை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.தேஷ்முக் சேகர் சஞ்சய் இ.கா.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, வாகனத்தில் இடம் பெற்றுள்ள நவீன தடயவியல் வசதிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்கள். நடமாடும் தடயவியல் ஆய்வக வாகனம் Mobile Forensic Science Laboratory vehicle) என்பது குற்றம் நடந்த இடத்திலேயே விரைவாகச் சென்று தடயங்களை சேகரிக்கவும், முதற்கட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தபடும் நவீன வசதிகள் கொண்ட வாகனமாகும். இந்நிகழ்வில், இயங்கும் தடயவியல் ஆய்வக உதவி இயக்குநர் திருமதி.கலாலெட்சுமி மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















