கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேருந்து நிலையம் அருகே போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 2.50 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சுமார் ரூ.12,500 மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், அந்த நபரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு

















