கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலிகானப்பள்ளி தமிழ்நாடு எல்லைப் பகுதியில், வருவாய் வட்டாட்சியர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்ததில், உரிய அனுமதியின்றி சுமார் 3 யூனிட் எம்-சாண்ட் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, எம்-சாண்ட் கடத்தலில் ஈடுபட்ட நபரைக் கைது செய்த அதிகாரிகள், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு

















