திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள எரமநாயக்கன்பட்டியில் கடந்த (24.05.2021) அன்று சாக்கடை பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சிங்காரம் என்ற பழனியப்பன் (65). என்பவரைக் கொலை செய்த கதிர்வேல் (59). என்பவரை ஆயக்குடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், (04.11.2026) வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கதிர்வேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கதிர்வேலை மதுரை மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். வழக்கில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிக்குத் தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.

















