மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணி மற்றும் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.இம்முகாமிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் சுந்தர வடிவேல், உதவி தலைமையாசிரியர் பாண்டி ஆகியோர்கள் தலைமை வகித்தனர். அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் கவிஞர்கண்ணதாசன் முன்னிலை வகித்தனர். இம்முகாமில், சேடபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சேடபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்று தங்களது ரத்தங்களை தானமாக வழங்கினர்.
இதில், ஒவ்வொரு நபரிடமிருந்து 250மிலி ரத்தங்கள் தானமாக பெறப்பட்டுள்ளது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பிரபு சிறப்பாக செய்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















