திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சின்னாளப்பட்டி காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சின்னாளபட்டியை அடுத்த அரிய நல்லூர் அருகே முன்னிலைகோட்டையில் வீட்டில் வைத்து அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பது தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் அங்கிருந்து 1050 கிலோ முழுமையாகத பட்டாசுகளை பறிமுதல் செய்து வருவாய்த்துறையினருடன் இணைந்து வீட்டிற்கு சீல் வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை மேற்கொண்டார். இது குறித்து சின்னாளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















