மதுரை: மதுரை மாநகராட்சி தலைமைப் பொறியாளர் திரு. ராமசாமி மற்றும் அவரது அலுவலகப் பணியாளர்கள் ஒப்பந்ததாரர்களிடமிருந்து லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், (22.09.2026) அதிகாரிகள் திடீர் கூட்டு சோதனை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனையின்போது, அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து கணக்கில் காட்டப்படாத ரூ. 1,35,000/- (ஒரு லட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய்) ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















