மதுரை: மதுரை மாநகரில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லுறவினை வளர்க்கும் விதமாகவும் , பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி வளர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்கள் அனைத்து காவல் சரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் செயல்பட்டு வருகிறது. அதன்படி, மதுரை மாநகரில் செயல்பட்டு வரும் 9 காவல் சிறுமியர் மற்றும் சிறுவர் மன்றங்களை மேலும் மேம்படுத்துவதற்கு தேவையான புத்தகங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக மதுரை மாநகர காவல்துறையுடன் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்கள் தலைமையில் (30.09.2026) HCL நிறுவனத்தினருடன் கையொப்பமானது. காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மற்றும் காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை ) ஆகியோர் உடனிருந்தனர். இந்நிகழ்ச்சியில் காவல் அதிகாரிகள் மற்றும் HCL நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் டாக்டர். நிதி புந்திர் மற்றும் HCL நிறுவன அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















