மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவதாகவும் அவ்வாறு பணி புரியும் ஊராட்சி செயலாளர்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென அந்தந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர் இந்த நிலையில் 8 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது அதன்படி மேலக்கால் ஊராட்சி செயலாளராக காடுபட்டியில் பணிபுரிந்த ஒய்யனன் தென்கரை ஊராட்சி செயலாளராக மன்னாடிமங்கலத்தில் பணிபுரிந்த திருச்செந்திலும் மன்னாடிமங்கலத்தின் ஊராட்சி செயலாளராக தென்கரையில் பணிபுரிந்த முனியராஜ் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதே போல் கருப்பட்டியில் ஊராட்சி செயலாளராக கதிரேசன் நாச்சிகுளம் ஊராட்சி செயலாளராக முனியாண்டியும் வாடிப்பட்டி அருகே உள்ள ராமையன்பட்டி ஊராட்சி செயலாளராக புஷ்பலதா என்பவரும் கச்சைகட்டி ஊராட்சி செயலாளராக மேலக்கால் ஊராட்சியில் பணிபுரிந்த விக்னேஷ் என்பவரும் ஊராட்சி செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதேபோல் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் திருவேடகம் ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஒரே ஊராட்சியில் பல வருடங்கள் பணி புரிவதால் நிர்வாக ரீதியில் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பும் மேலும் முறைகேடுகள் நடக்க வாய்ப்பும் இருப்பதாகவும் பொது மக்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது ஆகையால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















