மதுரை: சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அன்னதானமும் நடைபெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















