திண்டுக்கல்: திண்டுக்கல் சின்னாளபட்டியை அடுத்த பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சிவகுமார் என்பவர் வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புதுறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்தன. மேற்படி சம்பவம் குறித்து சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சத்யா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















