திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் நாகசதீஷ் கிடிஜலா அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வன சரக அலுவலர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் சிறுமலை, தென்மலை பொன்னருவி காப்புக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியின் உதிரி பாகங்கள் மற்றும் கடா மான் கொம்பு பதுக்கி வைத்திருந்த அண்ணன் தம்பிகளான ஜீவானந்தம் சந்தோஷ்குமார் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து நாட்டு துப்பாக்கி உதிரி பாகங்கள், காலியான துப்பாக்கி தோட்டா, கடமான் கொம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் சிறுமலையில் வனத்துறையினரின் பாதுகாக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















