சென்னை: காவலர் தினத்தையொட்டி, கோட்டூர்புரம் J4 காவல் நிலைய காவல் அதிகாரிகள் சார்பில் O பிளாக் மற்றும் P பிளாக் பகுதிகளுக்கு இடையே சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்களை சந்தித்த காவல்துறையினர், அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்து, தேவையான உதவிகள் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு காவலர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.வின்சென்ட் தேவா




















