கன்னியாகுமரி: மாவட்டத்தில் குற்றச் செயல்களை முன்கூட்டியே தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலின், IPS., உத்தரவின்பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர நடைரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொண்டு, குற்றச் செயல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.




















