சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இரயில்வே பாதுகாப்புப் படை (RPF) 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதன் உதய தினத்தை முன்னிட்டு, தென்னகரயில்வே ஐ.ஜி (IG) திரு. அருள்ஜோதி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் மதுரைகோட்ட இரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் திரு. ஏ.கே .பிரித், உதவி பாதுகாப்பு ஆணையர் திரு. சிவதாஸ், காரைக்குடி RPF ஆய்வாளர் திரு. S. சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் திரு. இளங்கோவன், தலைமை நிலைய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். படை பலர் விழாவின் ஒரு பகுதியாக, காரைக்குடியில் உள்ள ‘ஸ்ரீ தாயுமானவர் கருணை இல்லத்தில்’ தங்கியுள்ள சுமார் 28 முதியவர்களுக்குச் சிறப்பு இரவு உணவு வழங்கப்பட்டது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















