கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மருந்தக வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மருந்து உரிமையாளர்களுக்கான அறிவுரை வழங்கும் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி.எஸ். அனிதா அவர்கள் தலைமையில் (07.08.2026) நடைபெற்றது. மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இன்றி கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்றும், அவ்வகை மருந்துகளை விதிமுறைகளுக்கு புறம்பாக விற்பனை செய்வது சட்டப்படி குற்றம் என்றும் வலியுறுத்தப்பட்டது. சந்தேகத்திற்கு இடமான மருந்து விற்பனை, அதிகளவில் மருந்துகள் வாங்குதல் அல்லது சட்டவிரோத செயல்பாடுகள் குறித்து தகவல் தெரிந்தால், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மருந்து உரிமையாளர்களிடம் அறிவுரை வழங்கப்பட்டது.




















