மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சோழவந்தான் தொகுதி இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை சார்பாக தமிழ் தேசிய எழுச்சி மாநாடு பற்றிய தெருமுனை விளக்க கூட்டம் வாடிப்பட்டி சந்தை வாசல் முன்பு நடந்தது.இந்த கூட்டத்திற்கு, பாசறை மாவட்டச் செயலாளர் வாடிப்பட்டி வளவன் தலைமை தாங்கினார். மாவட்டப்
பொருளாளர் ஆசிரியர் பாலமுருகன் மாவட்டச் செயலாளர் ஜெயலட்சுமி,
ஒன்றிய ச் செயலாளர் தமிழ் குமரன்,தமிழ்ச்செல்வன் சிறுவாளை பூபதி, கல்லணை மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
.பேரூர் செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில், கட்சி
மாநில இணை பொதுச் செயலாளர் கனி அமுதன்,பாசறை மாநிலச் செயலாளர் ஊர் சேரி சிந்தனை வளவன்,மாவட்டச் செயலாளர் தமிழாளன்,முன்னாள் மண்டல செயலாளர் மாலின் ஆகியோர் விளக்கிப் பேசினார்.இதில், கட்சி நிர்வாகிகள் யுவராஜா அரசு விஜயா சிறுத்தை பாலன் அருண்குமார்,சேது, நாகமுத்து சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில், ஒன்றிய செயலாளர் கச்சைகட்டி ஹரிஷ் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி




















