திண்டுக்கல்: திண்டுக்கல், சென்னமநாயக்கன்பட்டி, திருப்பதி பாலாஜி நகரில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கம் வீடு உள்ளிட்ட அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம் மற்றும் நகை கொள்ளை போனது. இது குறித்து திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் உத்தரவின் பேரில் புறநகர் DSP.சங்கர் தலைமையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் அப்பகுதிகளில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட திருநெல்வேலியை சேர்ந்த சிவலிங்கம்(40). தமிழரசன்(26). ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம்,நகை ஆகியவற்றை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















