கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன மேனாகரம் கிராமத்தில் நாகேஷ் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், இந்நிலையில் (10.08.2026) ஆம் தேதி காலை சுமார் 09:30 மணிக்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவி மாதேவம்மா இருவரும் பூ மார்க்கெட் வேலைக்கு சென்றதாகவும், பின்னர் உடனே நாகேஷ் காலை சுமார் 11.00 மணிக்கு மீண்டும் அவருடைய வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அதே ஊரைச் சேர்ந்த குற்றவாளி நாகேஷ் என்பவரின் வீட்டில் இருந்து வேகமாக வெளியே வந்ததை கண்டதும் நாகேஷ் உடனே அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, அறையினுள் இருந்த பீரோ திறந்த நிலையில் இருந்ததாகவும், உடனே பீரோவில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 13 கிராம் தங்க நகைகள் காணவில்லை என்றும், உடனே குற்றவாளி மீது சந்தேகப்பட்டு அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்த போது குற்றவாளி ஒப்புக்கொண்டதன் பேரில் காவல் நிலையம் ஆஜராகி நாகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.




















