திண்டுக்கல்: திண்டுக்கல், நாகல்நகரை சேர்ந்த வீரேந்திரன்(27). இவருக்கு அரசு வேலைவாய்ப்பு தருவதாக பழனி, கலையம்புத்துறை சேர்ந்த மகாலிங்கம் மகன் சங்கர்(60). என்பவர் ஆசை வார்த்தை கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி ரூ.4,50,000 பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















