கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட், மூக்கண்டபள்ளி, பேடரப்பள்ளி, பேகேபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் போலீசார் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். வடமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மூன்று தனிப்படை போலீசார் இணைந்து 200-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சுமார் 3 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஓசூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்



















