திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆய்வாளர் திருமதி ரூபி அவர்களின் தலைமையிலும், (07.07.2026) செவ்வாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மனித உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியின் முக்கியத்துவம், சட்ட விழிப்புணர்வு, இணையவழி குற்றத் தடுப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படுதல், சட்டங்களை மதித்து பின்பற்றுதல் மற்றும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதில் மாணவர்களின் பங்களிப்பு குறித்து அறிவுறுத்தப்பட்டது.




















