திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் தலைமையில் , கந்திலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து கால்நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டார். ரோந்து பணியின்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற முக்கிய பொதுப் பயன்பாட்டு இடங்களைப் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
மேலும், குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், மேற்கண்ட இடங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்கள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவும், CCTV வசதி இல்லாத இடங்களில் விரைவில் கேமராக்களை நிறுவவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்.




















