திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, (01.07.2026) வள்ளிப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாணியம்பாடியில், சிங்கப்பெண் அதிரடிப்படை சார்பில் மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாணவிகளுக்கு பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், இணையவழி மோசடிகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வது, சமூக வலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் நடைமுறைகள், “குட் டச் – பேட் டச்” குறித்த விழிப்புணர்வு, போதைப்பொருள் தடுப்பு, தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் அவசரநிலைகளில் தைரியமாக செயல்படும் வழிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், 100 (காவல்துறை அவசர உதவி), 1930 (இணையவழி நிதி மோசடி புகார்), 1091 (மகளிர் உதவி), 1098 (குழந்தைகள் உதவி எண்) ஆகிய உதவி எண்களை தேவையான நேரங்களில் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.




















