திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி, திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், உதவி ஆய்வாளர் திருமதி.ரூபி அவர்களின் தலைமையில், சின்ன உதயமுத்தூர் செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டம் (POCSO), குழந்தைத் திருமணத்தின் தீமைகள், இணையவழி குற்றங்கள், காவல் உதவி செயலி பயன்பாடு, அவசர உதவி எண்களான 100, 1091, 1930 மற்றும் 1098 ஆகியவற்றின் பயன்பாடு மற்றும் அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக விழிப்புணர்வு வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் சுமார் 1,500 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.




















