திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் உட்கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், குறிப்பாக கௌக்காப்பட்டு, ஆவரான்குப்பம் உள்ளிட்ட இடங்களில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சிறப்பு நடை ரோந்து மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும், குற்றத் தடுப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கிராம விழிப்புணர்வுக் குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இக்கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு, குற்றத் தடுப்பு, சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்குத் தெரிவிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



















