திண்டுக்கல்: திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நடைரோந்து (Foot Patrol) பணியை மேற்கொண்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்த வேண்டும் என்றும் பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை அனுமதிக்க கூடாது மீறினால் அபராதம் விதிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து புறகாவல் நிலையத்தை ஆய்வு செய்து சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வின்போது நகர் DSP.கார்த்திக், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















