இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி, (30.06.2026) அன்று பணி நிறைவு பெற்ற காவல்துறையினரை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ், ஐ.பி.எஸ்., நேரில் சந்தித்து பாராட்டினார். பணி நிறைவு பெற்ற அதிகாரிகள் மற்றும் காவலர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, ஓய்வுக்கால வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, பணி நிறைவு பெற்றவர்களின் சேவையை பாராட்டினர்.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















