இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டகவயல் கிராமத்தில் நடைபெற்ற கிராம விழிப்புணர்வு குழு (Village Vigilance Committee) கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் கலந்து கொண்டு கிராம மக்களுடன் கலந்துரையாடினார். கூட்டத்தின் போது, பொதுமக்களின் பாதுகாப்பு, சட்டம் மற்றும் ஒழுங்கு, குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் இணையவழி மோசடிகளைத் தவிர்ப்பது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், கிராம மக்களின் குறைகள், பாதுகாப்பு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை நேரடியாகக் கேட்டறிந்த அவர், காவல்துறையுடன் பொதுமக்கள் இணைந்து செயல்படுவதன் மூலம் குற்றங்களைத் தடுக்கவும், அமைதியான சமூக சூழலை உருவாக்கவும் முடியும் என வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள், கிராம நிர்வாகிகள், Village Vigilance Committee உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















