இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS., அவர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இராமநாதபுரத்தில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. அக்பர் அலி




















