சிவகங்கை: பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாள்தோறும் நடைரோந்து (Foot Patrol) மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிஷேக் குப்தா, இ.கா.ப., அவர்கள் காவல்துறையினருடன் இணைந்து நடைரோந்து மேற்கொண்டு, சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.
இந்நடைரோந்தின் மூலம் பொதுமக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தி, அவர்களின் பாதுகாப்பு தொடர்பான தேவைகள் மற்றும் குறைகளை கேட்டறிவதுடன், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலை உறுதி செய்ய சிவகங்கை மாவட்ட காவல்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.




















