சிவகங்கை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதைத் தடுக்க மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மதுபான விற்பனை தொடர்பாக சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 15 பேர் கைது செய்யப்பட்டு, 1,087 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.




















