சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட கடம்பாகுடி அங்கன்வாடி மையத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி ஊழியர் திலகவதி தலைமையில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாக்க அனைத்து பெற்றோர்களும் தவறாமல் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து செலுத்த வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.




















