சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி முன்பு தெரு ஓர வியாரிகள் சங்கம் சார்பில் தங்களுக்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். வங்கி கடன் வழங்க வேண்டும். கடைகளில் மாநகராட்சி குறிப்பிட்ட கட்டணம் வசூலித்து அதற்கு ரசீது தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற நடவடிக்கை எடுக்க என வலியுறுத்தி AITUC தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையர் பாலுவிடம் அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் PL இராமச்சந்திரன்,
சிவாஜி காந்தி,சண்முகசுந்தரம், அப்பாஸ், ரவிச்சந்திரன், ஸ்ரீதர் சகுபர் அலி,ராஜா முகமது ராஜா,சதாம் உசேன்,தேவி நாச்சாள்,ரெங்கேஸ்வரி, அமிர்தம்,மெய்யர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















