மதுரை: மதுரை மாநகரில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் ஆலய திருக்குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) வைபவம் வருகின்ற (17.09.2026)-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, கும்பாபிஷேகம் வைபவத்தினை காண்பதற்காக இலட்சக்கணக்கான பொதுமக்கள் மக்கள் வரவிருக்கும் சூழ்நிலையில், மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு, சட்டம் மற்றும் ஒழுங்கு, கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் திரு. T.S. அன்பு அவர்கள் மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S.இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களும் இணைந்து மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் கோவில் சுற்றியுள்ள பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு), மற்றும் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோர்கள் உடனிருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா



















