சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஐயுலியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் உற்சாகமாக நடைபெற்றது. பந்தயத்தை கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபுவின் தந்தை துரை கருணாநிதி, கிட் & கிம் கல்லூரி நிறுவனர் ஐயப்பன் மற்றும் ஐஏஎஸ் அகாடமி நிறுவனரும் தொழிலதிபருமான மருங்கிப்பட்டி க. ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்தப் போட்டியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் பங்கேற்ற நிலையில், ஏராளமான பொதுமக்கள் திரண்டு கண்டு ரசித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















