சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.32,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், வரைவாளர் மணிகண்டன், கணக்காளர் ஹரிஹரன் மற்றும் உதவியாளர் முத்துமாரி ஆகியோரின் வங்கி கணக்குகளுக்கு ஒப்பந்ததாரர்கள் பணம் அனுப்பியிருப்பது கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், ஜி-பே (Google Pay) மூலம் ரூ.15.74 லட்சம் வரை லஞ்சப் பணம் பரிமாறப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















